நடப்பாண்டில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் இந்தியா அசூர வளர்ச்சி
நடப்பாண்டில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 42ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டை காட்டிலும் 83 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் செல்போன் ஏற்றுமதி அசூர வளர்ச்சி கண்டு உள்ளதாகவும், கொரோனா காலத்தில் மின்னணு சாதனங்களின் சந்தையில் ஏற்பட்டு முடக்கம், செமி கண்டக்டர்கள் இறக்குமதியில் உண்டான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஸ்மார்ட்போன்கள் வர்த்தகம் சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீனாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சந்தையும் பெரியளவில் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த ஏற்றுமதியில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்கள் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments