மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு
மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங்கிற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீதான அனைத்து துறை சார்ந்த விசாரணைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரம்பீர் சிங் மீது மகாராஷ்ட்ரா அரசு தொடுத்த அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையே இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மகாராஷ்ட்ர அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறை மூலம் பணவசூலில் இறங்கியதாக பரம்வீர் சிங் முன்னர் அளித்த புகாரை சிபிஐ ஏற்கனவே விசாரித்து வருகிறது.
இந்த பிரச்சினை காரணமாக பரம்வீர் சிங் மீது கடுமையான வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதிகள் இதன் தொடர்பையும் சிபிஐ விசாரிக்க வலியுறுத்தியுள்ளனர்
Comments