வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அதிபரின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றதாக தகவல்

0 1436
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை அதிபரின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றதாக தகவல்

வடகொரியா செலுத்திய அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முற்றிலும் அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பத்துடனும், இதற்கு முன் வடகொரியா வெற்றிகரமாக சோதித்து பார்த்திராத வகையிலான இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் Hwasongpho-17 வகை ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் விமான நிலையத்தில் இருந்து செலுத்தியது.

ஏவுகணை 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டருக்கும் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழித்து ஜப்பான் கடற்பரப்பில் விழுந்ததாகவும், கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு வட கொரியா சோதித்த சக்திவாய்ந்த ஏவுகணை என தென் கொரியா தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்புடனான ராஜாங்க சந்திப்புக்கு பின் நீண்ட தூர ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வட கொரியா தற்போது மீண்டும் சோதனையில் ஈடுபட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments