உடற்பயிற்சி கூடம் அமைக்க கொள்ளை அடித்த கொள்ளையன் கைது

0 1592
உடற்பயிற்சி கூடம் அமைக்க கொள்ளை அடித்த கொள்ளையன் கைது

திருப்பதியில் உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்காக 2 வீடுகளில் 70லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

ஐராலா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு வீட்டிலும், இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஒரு வீட்டிலும் இருந்த தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பதி போலீசார் கொள்ளை போன வீடுகளில் நண்பனாக வந்து சென்று கொண்டிருந்த சுரேஷ் பற்றி விசாரணை நடத்தியதில் 2 வீடுகளிலும் கொள்ளையடித்தது அவன்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவனது வீட்டில் இருந்து ஒரு கிலோ 610 கிராம் தங்க ஆபரணங்கள், 13 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments