ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியின்றி தேர்வு

0 11430
ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைக்கு ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பஞ்சாப்பில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த பதவிகளுக்கு வருகிற 31-ந்தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

பஞ்சாப்பில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மாநிலங்களவைக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழல் நிலவியது.

இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஹர்பஜன்சிங் உள்ளிட்ட 5 பேரும் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments