பாதுகாப்பு சோதனையில் 80 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியின் ஆடையை களையக் கோரிய சி.ஐ.எஸ்.எப் வீரர் பணியிடை நீக்கம்
அசாம் கவுகாத்தி விமான நிலைய பாதுகாப்பு சோதனையில் 80 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியை ஆடைகளை களையச் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டெல்லிக்கு தன் பேத்தியுடன் செல்ல இருந்த மாற்றுத்திறனாளி மூதாட்டியை சோதனையிட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து டைட்டானியம் பிளேட் வைத்ததற்கான ஆதாரத்தை காட்டக் கோரி வீல் சேரில் அமர்ந்திருந்த மூதாட்டியை ஆடையை களையக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மூதாட்டியின் மகள் ட்விட்டரில் பதிவிட்டதை அடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடத்தி வருவதகாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசரிப்பதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அப்பெண்ணிடம் உறுதியளித்தார்.
Comments