மரத்திலான டிரெட் மில் மாஸாக தயார் செய்த கைவினைஞருக்கு பாராட்டு..!
கைவினைஞர் ஒருவர் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட டிரட் மில் என்ற உடற்பயிற்சி சாதனத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். மின்சாரமின்றி எளிதாக இயங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அமைச்சர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை அந்த கைவினைஞரை பாராட்டி வருகின்றனர்.
எந்திரமயமாகி வரும் வாழ்க்கையில் விளையாட்டு தேகப்பயிற்சி என்பதே பலருக்கு கைக்கு எட்டாத தூரத்துக்கு சென்று விட்டது. தங்கள் உடல் நலனில் அக்கறை உள்ள வசதி இருப்போர் உடல் எடை கூடுவதை தவிர்ப்பதற்காக நின்ற இடத்திலேயே வாக்கிங் செல்லும் சாதனமான டிரெட் மில்லை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மின்சாரத்தில் இயங்க கூடிய இந்த வகை டிரெட் மில் சாதனங்கள் குறைந்த பட்சம் 8 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையில் அதன் தரத்திற்கேற்ப விற்கப்படுகின்றது. பெரும்பாலன நகர்புற பெண்கள் இத்தகைய சாதனங்களை உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மரப்பலகைகளை ஒருங்கிணைத்து , மரச்சட்டத்தில் இரும்பிலான பேரிங்குகளை பொறுத்தி , பெல்ட்டு போல ஒருங்கிணைக்கப்பட்ட மரப்பலகைகளை கோர்த்து முழுமையான டிரெட் மில்லாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார் தெலுஙானாவை சேர்ந்த கைவினைஞர் ஒருவர்.
அவர் மரப்பலகைகளை கொண்டு டிரெட் மில் செய்யும் இந்த வீடியோவை அருன் பகவத்துல்லா என்பவரின்டுவிட்டர் சமூக வலைதள கணக்கு மூலம் பெற்ற தெலங்கான அமைச்சர் கே.டி.ராமாராவ் இந்த வீடியோ வை பகிர்ந்து அந்த கைவினைஞரை தயவு செய்து தன்னை தொடர்பு கொள்ள கூறுங்கள் என்று தெரிவித்து இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
திறமையானவர்கள் கண்ணுக்கு பட்டால் பாராட்ட தவறாத ஆனந்த் மகிந்த்ராவும் கைவினைஞரின் இந்த திறமையை பாராட்டியதோடு தனக்கும் இது மாதிரி ஒன்று வேண்டும் என்று தனது ஆவலை வெளிப்படுத்தி உள்ளார்.
அமைச்சர்கள் தொழில் அதிபர்கள் என பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் இந்த மரத்தினாலான டிரெட் மில்லை செய்த கைவினைஞரின் பெயர் விவரங்களை சேகரிக்கும் பணியை தெலங்கானா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். திறமை எங்கு இருந்தாலும் அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்த கைவினைஞரே சான்று.
Comments