விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

0 2645
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

விருதுநகரில் இளம்பெண்ணை ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் விருதுநகர் ஊரக காவல்துறை விசாரணை அதிகாரியான அர்ச்சனா, வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் வினோதினியிடம் வழங்கினார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், கைதானோரின் கணினி, செல்போன்களை ஆய்வு செய்யவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments