ரூ.2.50 கோடி கடனைத் திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. கடைக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்தவரை தேடும் போலீசார்..!
சென்னை அடுத்த செங்குன்றத்தில் மொத்த வியாபாரியிடம், 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை கடனாகப் பெற்றுக்கொண்டு, அதற்கானப் பணத்தை கொடுக்காமல், கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்திய மூர்த்தி என்ற மொத்த வியாபாரியிடம் ஜோதி என்பவர் கடந்த சில ஆண்டுகளாகத் தன் கடைக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வாங்கிய ஜோதி, அதற்கான பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
பொறுமை இழந்த சத்தியமூர்த்தி போலீசில் புகார் அளிக்கப்போவதாக எச்சரித்ததை தொடர்ந்து, ஜோதி 10க்கும் மேற்பட்டோருடன், சத்தியமூர்த்தி இல்லாத சமயம் அவரது கடைக்குள் புகுந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகாராளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஜோதியைத் தேடி வருகின்றனர்.
Comments