கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது மேகதாது அணை தொடர்பாக தீர்மானம்

0 1761

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாதென மத்திய அரசை வலியுறுத்தியும் திங்கட்கிழமையன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீது பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்டுவது கர்நாடக அரசின் அடிப்படை உரிமை என்றும் அதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை கிடையாது என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து மேகதாது அணை குறித்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments