உக்ரைன் நாட்டிற்கு 6,000 ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
உக்ரைன் நாட்டிற்கு 6 ஆயிரம் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை முழுமையாக கைப்பற்றும் வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஏற்கனவே நான்காயிரம் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஜாவலின் ரக ஆயுதங்களை வழங்கியுள்ள பிரிட்டன், கூடுதலாக ஏவுகணைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதேபோல், போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உக்ரைனுக்கு 251 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும், அந்நாட்டிற்கு ராணுவ உதவிகளை வழங்கவும், ரஷ்யாவுக்கான பொருளாதாரத் தடைகளை இரட்டிப்பாக்கவும் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments