விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக போராட்டம்
விருதுநகரில், இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கி அவர் கம்பீரமுடன் வாழ அரசு வகை செய்ய வேண்டும் என்றார்.
மேலும், வரும் காலங்களில் எந்தவித தடையும் இல்லாமல் பட்டாசு தொழில் செயல்பட பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
Comments