சென்னை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை பணி 70 சதவீதம் நிறைவு - அமைச்சர் எ.வ.வேலு
சென்னை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணி 70% நிறைவடைந்துள்ளதாகவும், மண் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால், மறு டெண்டர் விடக்கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், மலை பாதுகாப்பு மண்டலம் உள்ளிட்ட காரணங்களால் கன்னியாகுமரி ஆட்சியர் கிரவல் மண் எடுக்க தடை விதித்ததால் சாலைப் பணிகள் முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்திலிருந்து மண், ஜல்லி எடுத்து சாலை அமைப்பதால் இழப்பு ஏற்படும் எனக்கூறி, மறு டெண்டர் விடுமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் எல் அண்ட் டி கேட்டுள்ளதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார்.
Comments