பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை-வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு
வேலூரில் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு இளம்பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, இரவு 12 மணிக்கு மேல் சவாரி ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரின் ஐ.டி. எண், தொலைபேசி எண், உரிமையாளர் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் பயணிகள் பார்வையில் படும்படி கட்டாயம் ஆட்டோவில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட இந்த உத்தரவு டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் பொருந்தும் என வேலூர் ஏ.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இளம்பெண் மருத்துவர்இதனிடையே, பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக வேலூர் வடக்கு காவல் நிலைய காவலர்கள் ஜெய்கரன், நித்தியானந்தம், சுரேஷ் பாபு ஆகிய மூன்று பேரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Comments