குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகு கடலில் மூழ்கியது

0 1403

இலட்சத் தீவு அருகே மீன்பிடிக்கக் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சென்ற படகு மூழ்கிய நிலையில், அவர்கள் மற்றொரு படகில் ஏறிப் பாதுகாப்பாக ஊருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இலட்சத் தீவைச் சேர்ந்த மாபுரூக் என்பவரின் விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்குச் சென்றனர். செவ்வாயன்று அவர்களின் படகின் அடிப்பகுதி சேதமடைந்து நீர் உள்ளே புகுந்ததால் படகு மெல்ல மெல்லக் கடலில் மூழ்கத் தொடங்கியது. இதையறிந்த மீனவர்கள் அருகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த செயின்ட் மேரீஸ் என்கிற படகில் ஏறி உயிர்தப்பினர். அப்போது படகு கடலில் மூழ்கிய காட்சியைப் படம் பிடித்துள்ளனர்.

சேதமடைந்த படகு கடலில் மூழ்கிய நிலையில் மற்றொரு படகில் ஏறித் தப்பிய 13 மீனவர்களும் இன்று தேங்காய்ப்பட்டணத்துக்கு வந்து சேர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments