பழமை வாய்ந்த சிவகிரி பொன்காளியம்மன் கோவில் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ பந்தம் ஏந்தி வழிபாடு
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமையான பொன்காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ பந்தம் ஏந்தி சாமி தரிசனம் செய்தனர்.
பொன்காளியம்மன் கோவில் பங்குனி உற்சவம் கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் தீப்பந்த வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது. கோவிலை சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு தீப்பந்தம் பிடித்து வழிபட்டனர்.
Comments