ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச பெல்ஜியம் சென்றார் பைடன்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெல்ஜியம் சென்றுள்ளார்.
தலைநகர் பிரஸ்ஸல்ஸ்-ஐ சென்றடைந்த அவரை அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ வரவேற்றார். பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ள நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உடனான அவசர ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், அங்கிருந்து ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உடனான ஆலோசனைக்கூட்டத்திலும் பைடன் பங்கேற்று பேசுகிறார். இதைத் தொடர்ந்து. நாளை போலந்து சென்று அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரிசெஜ் டூடாவுடனும் பைடன் பேச உள்ளார்.
பைடனின் இந்த 4 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை பைடன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய நாடாளுமன்ற கீழவையில் உள்ள 300 உறுப்பினர்கள் மீது அமெரிக்கா சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
Comments