ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்.!

0 2563

விருதுநகரில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

ராஜபாளையம் அருகே ஈஎஸ்ஐ காலனி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் என்பவரது மனைவி வீரலட்சுமி கர்ப்பம் தரித்திருந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலம் வீரலட்சுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளன. 3 குழந்தைகளும் ஆரோக்கியமுடன் இருப்பதாக, மருத்துவர்கள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments