டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்குத் தனிப்பாதை
டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கெனத் தனிப் பாதை பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுவோருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பேருந்துகளுக்கு 15 தடங்களில் தனிப்பாதையை நடைமுறைப்படுத்த உள்ளதாகக் தெரிவித்துள்ளது. இந்தப் பாதைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் மட்டுமே செல்லலாம் என்றும், இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மற்ற வாகனங்களும் செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தனிப்பாதையில் பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் 24 மணி நேரமும் செல்லலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Comments