10ஆம் வகுப்பு படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. சேரும், அரசு பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம், உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கிலே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு நேரடியாக ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் இந்த திட்டம் பொருந்துமா? என கேள்வி எழுந்த நிலையில், அதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
மேலும், காமராஜ் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு கல்லூரிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
Comments