ஜம்மு காஷ்மீர் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறிய கருத்துகளுக்கு இந்தியா எதிர்ப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்ற மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறிய கருத்துகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதில் தலையிட சீனா உள்ளிட்ட எந்த அயல் நாட்டுக்கும் எந்த வித உரிமையும் இல்லை என்று இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் அழைப்பதாக வாங் யீ கூறியிருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மாநாடு தொடர்பான கூட்டறிக்கையில் காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தால் பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது.
இந்தியா சீனா இடையே சிதைந்த ராஜ்ஜிய உறவுகளை புதுப்பிக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி வரும் சீன அமைச்சர் வாங் யீ டமும் இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய உள்ளது.
Comments