மேற்கு வங்கம் பிர்பும் வன்முறைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.. 5 பேர் கொண்ட பாஜக குழு கொல்கத்தா பயணம்.!

0 2263

மேற்கு வங்கம் பிர்பும் வன்முறைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட பாஜக உண்மை அறியும் குழு கொல்கத்தா சென்றுள்ளது.

குழந்தைகளையும் பெண்களையும் உயிருடன் கொளுத்திய கொடியவர்கள் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக எம்பி சத்யபால் சிங் தலைமையில் கொல்கத்தா வந்த பாஜக குழு இன்று சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இதனிடையே சம்பவ இடத்தில் தடயங்களை யாரும் அழித்து விடக்கூடாது என்றும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments