அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த திட்டம்
இந்தியாவில் தற்போது உள்ள 140 விமான நிலையங்களை 220 ஆக அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்க உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர்ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 66 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மக்களவையில் பேசிய அவர் கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது நிலைமை மாறியிருப்பதால், விமானப் போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஏழு நாட்களில் சராசரியாக தினமும் மூன்று லட்சத்து 80 ஆயிரம் பயணிகள் விமானங்களில் பயணித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.அடுத்த மூன்று ஆண்டுகளில் இது மும்மடங்காக மாறும் என்று தெரிவித்த அமைச்சர், விரைவில் ஜெட் மற்றும் அசாகா ஆகிய இரண்டு புதிய விமான சேவைகளும் தொடங்க இருப்பதாகத் தெரிவித்தார்
Comments