இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு.. தலைநகர் கொழும்புவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.!
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பட்டைக் கண்டித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக தலைநகர் கொழும்புவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்ற நிலையில், எரிபொருள் விற்பனை நிலையங்களில் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக எதிர்கட்சியினர் கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்திக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments