கப்பல் மோதியதால் 50 பயணிகளுடன் படகு உடைந்து மூழ்கிய காட்சி..!

0 3082

பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றின் மீது பிரமாண்ட சரக்கு கப்பல் பயங்கரமாக மோதி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்தில்  உடைந்து நொறுங்கிய படகு கடலில் மூழ்கியதில் 6 பேர் பலியாகினர். இந்த பதை பதைக்க வைக்கும் சம்பவத்தின் வீடியோ  காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட் படங்களில் வருவதை போல பிரமாண்ட கப்பல் ஒன்று , பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இடித்து தள்ளிக்கொண்டு செல்லும் இந்த சம்பவம் பங்களதேஷ்ஷின் டாக்கா அருகே நடந்துள்ளது. பங்களதேஷின் டாக்க தொடங்கி முக்கிய நகரங்களை இணைப்பது அங்குள்ள நதிகள் தான். அங்கு நீர்வழி போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது.

அங்கு கடல் போல காட்சி அளிக்கும் சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ந்தேதி மதியம் 2 மணி அளவில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று பயணித்தது. அப்போது அந்த வழியாக சென்ற பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அந்த பயணிகள் படகின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த படகு படகில் முன்பக்கத்தில் சிக்கிக் கொண்டது . அந்த படகு இழுத்து செல்லப்பட்டதால் படகில் இருந்த பயணிகள் உயிர் பிழைக்க கூச்சலிட்டனர்

படகில் இருந்த சிலர் நிலைமையின் விபரீதம் உணர்ந்து உயிர் பிழைப்பதற்காக ஆற்றில் குதித்தனர்

கப்பலின் மாலுமி சுதாரித்துக் கொண்டு கப்பலை நிறுத்துவதற்கு முன்பாக கப்பலில் சிக்கிய அந்த படகு உடைந்து நொறுங்கி ஆற்றில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் 6 பேர் வரை பலியான நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த கப்பலின் அருகில் மற்ற படகுகளில் பயணித்தவர்கள் எடுத்த பதை பதைக்க வைக்கும் மற்ற வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது

கப்பல் மாலுமியின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் , நீர்வழி போக்குவரத்து துறையில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடே இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments