பேருந்தில் இருந்து இறங்கிய பெண், அதே பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் : ஓரு நொடி ஒதுங்கி நிற்காததால், நடந்த விபரீதம்

0 2390

தராபாத்தில், பேருந்தை விட்டு கீழே இறங்கிய பெண், ஒருசில நொடிகள் கூட ஒதுங்கி நிற்காமல், பேருந்தின் முன்புறத்தை ஒட்டியவாறு சாலையை கடக்க முயன்ற நிலையில், அதே பேருந்து மோதி, உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. அப்சல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பேருந்தின் முன்படிக்கட்டு வழியாக பெண்மணி கீழே இறங்கியுள்ளார். அவர், சாலையை கடக்க விரும்பினால், உடனடியாக, தனது இடதுபுறத்தில், சாலை ஓரம் ஒதுங்கி நின்று, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் கடந்து சென்றபின்னர், உரிய இடத்தில், சாலையை கடந்திருக்க வேண்டும்.

ஆனால், பேருந்தின் முன்படிக்கட்டில் இருந்து இறங்கிய வேகத்தில், உடனடியாக பேருந்தை ஒட்டியவாறு, சாலை கடக்க முயற்சித்துள்ளார். இவ்வாறு கடக்கும்போது, பேருந்து ஓட்டுநருக்கு அது பெரும்பாலும் தெரியாமல் சென்றுவிடும். காரணம், பேருந்தின் 2 படிக்கட்டுகளிலும், பயணிகள் ஏறி இறங்குவதை தான் ஓட்டுநர் கவனித்துக் கொண்டிருப்பார்.

சாலை விதிகளை பின்பற்றாமல், ஒரு சில வினாடிகள் கூட தாமதிக்காமல், பேருந்தின் முன்புறத்தை ஒட்டியவாறு கடந்ததால், அந்த பெண்மணி விபத்தில் சிக்கி, விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments