உக்ரைன் நாட்டு ஆயுத கிடங்கை குறி வைத்து ரஷ்யா ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் ரிவ்னி நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து, ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தும் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தொலை தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணைகளை கடலில் இருந்து செலுத்தியதாகத் தெரிவித்த ரஷ்ய ராணுவம், இந்தத் தாக்குதல் மூலம் உக்ரைன் நாட்டு கிடங்கில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
Comments