பேரிடர்க் காலத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய பணியாளர்களுக்கு எதிர்காலப் பணி நியமனத்தில் முன்னுரிமை - அமைச்சர் மா.சு

0 1561

பேரிடர்க் காலத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக எடுத்தது அதிமுக அரசு தான் எனத் தெரிவித்தார். ஓராண்டுக் காலப் பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் அவர்களுக்கு 3 மாதப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதாகவும், அதன்பின் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments