காஷ்மீர் பற்றியெரியும்போது பரூக் அப்துல்லா லண்டனுக்குச் சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
காஷ்மீர் பற்றியெரியும்போது பரூக் அப்துல்லா லண்டனுக்குச் சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
வன்முறையால் காஷ்மீரைவிட்டுப் பண்டிட்கள் வெளியேறியது குறித்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துக் கூறிய பரூக் அப்துல்லா, ஹிட்லரும் கோயபல்சும் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பியது போல், இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்த பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், யார் தவறு செய்தார் என்பது பற்றிய ஆவணப்படம் இது என்றும், பரூக் அப்துல்லாவின் பேச்சு அவரின் குற்றவுணர்வைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் பண்டிட்களின் இனப்படுகொலைக்கும், அங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கும் பரூக் அப்துல்லாவே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். 1989ஆம் ஆண்டு ஸ்ரீநகரில் இருந்து லண்டனுக்குச் சென்ற பரூக் அப்துல்லா 1996ஆம் ஆண்டுதான் நாடு திரும்பியதாகவும் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.
Comments