விபத்தில் இளைஞர் மூளைசாவு : அவரின் கண்கள்,இருதயத்தின் வால்வுகள், சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானம்

0 1463

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 31 வயது நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

அணைக்கட்டு அடுத்த சேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த  கலையரசன் என்பவர், கடந்த 18-ஆம் தேதி, உள்ளிபுத்தூர் கூட்ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விழுந்ததகாவும், மரத்தின் அருகே இருந்த பெரிய கல் மீது அவரது தலைப்பகுதி  மோதியதாகவும் கூறப்படுகிறது.

அவரை மீட்ட பொதுமக்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவருக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது இருதயத்தின் வால்வுகள், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானம் கொடுக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments