கடும் பொருளாதார நெருக்கடி.. குடும்பம், குடும்பமாக தமிழகத்திற்குள் தஞ்சமடையும் இலங்கை தமிழர்கள்

0 2220

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கைக்குழந்தைகளுடன் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், யாழ்பாணம், மன்னார், வவுனியா பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழகம் நோக்கி படையெடுக்கின்றனர்.

இலங்கையின் மன்னாரில் இருந்து பைபர் படகில் புறப்பட்ட 10 பேர், இடையில் நடுக்கடலில் படகு இஞ்சின் பழுதானதால் சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக நடுக்கடலில் தவித்ததோடு, நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தனுஷ்கோடி வடக்குப்பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments