ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவர் தொடர்புடைய 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

0 1724
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவர் தொடர்புடைய 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

டெல்லி, அரியானாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவர் பவன் முஞ்சாலின் வீடு, அவர் தொடர்புடைய 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டையடுத்து ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத் தலைவர் பவன் முஞ்சால் வீட்டிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

டெல்லி, குருகிராம் மற்றும் வட இந்தியாவின் பிற நகரங்களிலும் சோதனை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 40 நாடுகளில் வணிகச் செயல்பாட்டைக் கொண்டுள்ளதுடன், இந்தியாவில் 6 இடங்களிலும், கொலம்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு இடத்திலும் உற்பத்தி ஆலைகளையும் கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments