ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமகவின் ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமகவைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தமாக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆடுதுறை பேரூராட்சியில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் போது திமுக உறுப்பினர்கள் 3 பேர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் உத்தரவுபடி இன்று மீண்டும் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.
திமுக, இந்திய முஸ்லீம் லீக், மதிமுக கட்சிகளைச் சேர்ந்த 7 கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால், சுயேட்சை மற்றும் அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Comments