அமெரிக்காவின் இன்றியமையாத கூட்டாளி இந்தியா - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்
ரஷ்யாவுடன் இந்தியா வரலாற்று உறவுகளைக் கொண்டிருந்த போதிலும், இந்தியா தங்கள் இன்றியமையாத கூட்டாளி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகள் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த நிலையில் இந்தியா நடுநிலையாக இருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வினவப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், இந்தியாவும் அமெரிக்காவும் இரு நாடுகளின் நலன்களுக்காகக் கூட்டாளிகளாக உள்ளதாகத் தெரிவித்தார். உலகின் மற்ற நட்பு நாடுகளைப் போல் இந்தியாவும் விருப்பத்தின் அடிப்படையிலான கூட்டாளி என அவர் குறிப்பிட்டார்.
Comments