மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்த லாரி.. 37 ஆடுகள் பலி.. 16 ஆடுகள் படுகாயம்..

0 4033
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூரில் மேய்ச்சலுக்காக கூட்டமாக சென்ற ஆடுகள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில், 37 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூரில் மேய்ச்சலுக்காக கூட்டமாக சென்ற ஆடுகள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில், 37 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

நடுக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், தனக்கு சொந்தமான 100 ஆடுகளை கல்லூர் ரயில்வே கேட் அருகே மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

கல்லூர்- சீதபற்பநல்லூர் சாலை திருப்பத்தில் ஆடுகள் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 37 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்த நிலையில், 16 ஆடுகள் படுகாயம் அடைந்தன. விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கேயே லாரியை விட்டுவிட்டு தப்பியோடிய நிலையில், போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments