மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ. தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை..
நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - நாக்பூர் விரைவுச்சாலையில் காட்டு விலங்குகள் செல்வதற்காகப் பல இடங்களில் பசுமைப் பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தின் மும்பை - நாக்பூர் நகரங்களிடையே 701 கிலோமீட்டர் தொலைவுக்கு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
காட்டுப் பகுதிகளில் விலங்குகள் சாலையைக் கடக்க வசதியாக 9 இடங்களில் பசுமைப் பாலங்கள் எனப்படும் மேம்பாலங்களும், 17 இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளில் காட்டு விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க இத்தகைய வசதிகள் செய்யப்பட வேண்டும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Comments