தியாகிகள் நாளையொட்டி விடுதலைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி..

0 2105
தியாகிகள் நாளையொட்டி நாட்டு விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

தியாகிகள் நாளையொட்டி நாட்டு விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளைப் பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் மத்தியச் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசி விடுதலை வேட்கையை எடுத்துரைத்த புரட்சியாளர்கள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் லாகூர்ச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டிப் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், பாரதத் தாயின் பிள்ளைகளான பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு அஞ்சலி எனக் குறிப்பிட்டுள்ளார். தாய் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அவர்களின் தியாகம் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் தியாகிகளை நினைவு கூர்ந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments