சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கையர்களுக்கு இலவச கல்வி

0 1802

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் சேர விரும்பும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 131 கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், அனைத்து கல்லூரிகளிலும் மூன்றாம் பாலினத்தவருக்கு தலா ஒரு இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்தவுடன் வரும் கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் 340 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments