உலகிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் பார்கின்சன் நோய் அறிகுறி பாதித்த இளைஞருக்கு நவீன ரோபோ மூலம் அறுவை சிகிச்சை

0 2729

உலகிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் பாதித்த இளைஞருக்கு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தானியங்கி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அபினய் குமார் என்பவர் மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கும் பார்கின்சன் நோயின் அறிகுறியால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் இறுக்கம், உடல் நடுக்கம், எழுந்து நடக்க முடியாத பிரச்சினை உள்ளிட்ட பக்கவிளைவுகளால் உடல் செயலற்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம்  பிரத்யேகமாக புரோகிராமிங் செய்யப்பட்ட தானியங்கி ரோபோவை கொண்டு அபினய் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி அபினய்க்கு சிகிச்சை நடைபெற்ற நிலையில், தற்போது நல்ல நிலையில்  இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments