சீனாவில் 132 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்… யாராவது உயிர் பிழைத்துள்ளார்களா? 2,000 மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல்
சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதியில் இரவு பகலாக தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இவ்விபத்தில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், விபத்தில் யாராவது உயிர் பிழைத்துள்ளார்களா எனத் தேடும் பணியில் 2ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகள் சிலரின் உடமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 6 லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில் ட்ரோன் கேமிராக்களை கொண்டு, கருப்புப் பெட்டியை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
Comments