சீனாவில் பெருகும் கொரோனா பரவலால் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக் குறி?
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் பயின்று வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி உள்ளது.
சீனாவில் தற்போது மேலும் கொரோனா அலை கோரமாக வீசத் தொடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகள் மாபெரும் பூட்டுதலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மாணவர்கள் நேரடி கல்விக்காக சீனா செல்ல முடியாத நிலை உள்ளது.
மாணவர்களின் தேவைக்கேற்ப நாட்டிற்குள் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது குறித்து தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.
இதனால் அங்கு மருத்துவம் பயிலும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் நடப்பாண்டிலும் தங்கள் நேரடி கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Comments