மேற்கு வங்கம் பிர்பும் பகுதியில் 8 பேர் உயிருடன் தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கேட்டது மத்திய அரசு

0 2687

மேற்கு வங்கம் பிர்பும் பகுதியில் தீ வைப்பு வன்முறைச் சம்பவம் குறித்த அறிக்கையை அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்ததில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.ஏராளமான வீடுகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.வங்கத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்றும் பயங்கரவாதமும் வன்முறையும் தலைவிரித்தாடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

இதனிடையே மேற்குவங்க பாஜகவைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து மேற்குவங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற கிராமத்துக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிஐடி குழு விசாரணைக்காக விரைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments