சீனா, பாக். எல்லைகளைக் கண்காணிக்க ராணுவத்துக்கு தனி செயற்கைக் கோள்... ரூ.4,000 கோடி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கண்காணிப்பு செயற்கைக் கோள் அமைக்கும் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுவின் கூட்டத்தில் 'ஜிசாட் 7 பி' என்ற செயற்கைக் கோளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இஸ்ரோவுடன் இணைந்து நிறுவப்படும் இந்த செய்ற்கைக் கோள் மூலம் நாட்டின் எல்லைகளை ராணுவம் கண்காணிக்க இயலும்.முப்படைகளில் ஏற்கனவே கடற்படையும் விமானப்படையும் பிரத்தியேகமான செயற்கைக் கோள்களை பெற்றுள்ளன.ராணுவத்திற்கும் தனி செயற்கைக் கோள் அமைவது அதனை பலப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments