கூடுதல் கட்டணம் வசூலித்ததை மறைக்க வருகை பதிவில் திருத்தம் செய்த தனியார் பல் மருத்துவக் கல்லூரி... 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

0 2596

நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெறும் நோக்கில், மாணவிகளின் வருகை பதிவில் திருத்தம் செய்த தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்றத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில்,  அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற மாணவியும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த ரம்யா பிரியா என்ற மாணவியும் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், சான்றிதழைத் தர மறுத்ததாகவும் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பை பெறுவதற்காக, இருவரின் வருகைப் பதிவை திருத்தி, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments