உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல இந்திய விமானிகளைப் பயன்படுத்த வேண்டும்... அதிபர் ஜோ பைடனுக்கு எம்.பிக்கள் வலியுறுத்தல்

0 4962

உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்குவதற்காக இந்தியாவின் விமானிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து 20 எம்பிக்கள் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா, பிரேசில், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளைத் தொடர்பு கொண்டு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு விமானிகளை அழைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் உக்ரைனின் தலைநகரம் உள்பட பல இடங்களில் உணவுக்கும் குடிநீருக்கும் கடும் பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யா ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தும் என்பதால்,  நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல அதற்கு ஆபத்து இல்லாத நாடுகளின் விமானங்களை அனுமதிக்க ரஷ்யாவை வலியுறுத்துமாறும் கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments