உக்ரைனில் கெர்சன் நகரில் 3 லட்சம் பேர் உணவு, மருந்துகள் கிடைக்காமல் பரிதவிப்பு

0 1574

உக்ரைனில் கெர்சன் நகரில் சுமார் 3 லட்சம் பேர் உணவுக்கு தவிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவம் ஊரை விட்டு யாரையும் செல்ல விடாமல் தடுப்பு அமைத்து இருப்பதால் கெர்சன் நகரம் மிகப்பெரிய பஞ்சத்தை எதிர் நோக்கி இருப்பதாகவும் உணவு, மருந்துகள் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையிலும் ரஷ்ய ராணுவம் குடிமக்களை ஊரை விட்டு வெளியேற்ற மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து ரஷ்யாவின் தரப்பில் பதில் ஏதும் இல்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments