ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் இந்தியா தடுமாறுகிறது - ஜோ பைடன்
ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தடுமாறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டியுள்ளார்.
வாஷிங்டனில் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஓரணியில் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், குவாட் கூட்டமைப்பிலும் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளதாகவும், இந்தியா மட்டுமே விதிவிலக்காக உள்ளதாகவும் பைடன் கூறினார்.
உக்ரைன் விவகாரத்தில் நேட்டோவில் பிரிவினை ஏற்படுத்தலாம் என புதின் எதிர்ப்பார்த்தாகவும், ஆனால், இந்தளவு ஒற்றுமையாக இருக்கும் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் என்றும் பைடன் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறுத்திக்கொண்ட நிலையில், இந்தியா தொடர்ந்து இறக்குமதியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments