நாட்டின் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
நாட்டின் 25 மாநிலங்களில் உள்ள 68 நகரங்களில் 2 ஆயிரத்து 877 மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 எக்ஸ்பிரஸ் சாலைகளின் ஓரங்களில் ஆயிரத்து 576 சார்ஜிங் மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அவர் தெரிவித்தார்.
மின்சார வாகன பயன்பாட்டுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் சார்ஜிங் மையம் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய மின்துறையின் வழிகாட்டுதல்கள் படி நெடுஞ்சாலைகளின் இரு பக்கங்களிலும் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நகரங்களை பொருத்தவரை, ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments