சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைமுக தேர்தலில் தான் வெற்றிப்பெற்றும் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக திமுக போட்டி வேட்பாளர் வனிதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மறைமுக தேர்தலை மார்ச் 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான அவசியம் என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணியிடை நீக்கம் மட்டும் தீர்வாகாது என கூறினர்.
மேலும், தோல்வி அடைந்தவர் தரப்பினரின் குளறுபடியால், மீண்டும் தேர்தலை நடத்தினால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தோல்வியடைந்துவிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments