கடும் பொருளாதார நெருக்கடி... அடைக்கலம் தேடும் இலங்கை மக்கள்...

0 2653
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் அங்கிருந்து தமிழகத்தில் மக்கள் வரத் தொடங்கி உள்ளனர். முறையான அனுமதி இன்றி ராமேசுவரம் அருகே உள்ள தீவில் வந்திறங்கியவர்களை கடலோர காவல்படை பிடித்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் அங்கிருந்து  தமிழகத்தில் மக்கள் வரத் தொடங்கி உள்ளனர். முறையான அனுமதி இன்றி ராமேசுவரம் அருகே உள்ள தீவில் வந்திறங்கியவர்களை கடலோர காவல்படை பிடித்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, காய்கறி, பால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஒரு கோப்பை தேநீரின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அரிசி கிலோ 450 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 75 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

வடை ஒன்று 80 ரூபாய்க்கும் ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொருட்களை வாங்க இயலாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை மக்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். ராமேசுவத்திற்கு அருகே உள்ள நாலாம் தீவில், இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் வந்திறங்கினர்.

முறையான ஆவணங்கள் இன்றி அவர்கள் வந்துள்ளது குறித்த தகவல் அறிந்த கடலோர காவல் படை விரைந்து சென்று அவர்கள் பிடித்து ராமேசுவரம் கொண்டு வந்தது. அங்கு அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பொருளாதார நெருக்கடியை தாங்க முடியாமல் தமிழகத்திற்கு வந்து விட திட்டமிட்டதாக தெரிவித்தனர். அவர்களை போலவே மேலும் பலர் தமிழகத்திற்கு வர திட்டமிட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அவர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக ராமேஸ்வரம், மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments